Please write copy for the following links or photos or
graphics or videos as per the platforms mentioned:
1.
YOUTUBE: Rewrite the title and
description for this video:
https://www.youtube.com/watch?v=UT_mmDrmvUA&t=1s
TITLE: சோதனைகளில் இருந்து மீண்டு வருபவர்களே சாதனையாளர்கள். நம் மெஸ்ஸியும் அப்படிப்பட்டவர்தானே?
DESCRIPTION: தனது பார்சிலோனா க்ளப்பிற்காக பெரிதும் சோபித்துள்ள, ‘மெசிடோனா’ என செல்லமாய் அழைக்கப்படும் நம் லயனல் மெஸ்ஸி இன்றளவும் தனது தாய்நாடான அர்ஜென்டீனாவிற்கு சிறப்பாக விளையாடியதில்லை. அவர் அவ்வாறு செயல்படுவாரா என்பதே இப்போது அவரது மொத்த நாட்டின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. ‘நைஜீரியா அணியிடமும் தோற்றுவிட்டால் ஊருக்கு நடையைக் கட்ட வேண்டியதுதான்’ என்ற இக்கட்டான சூழ்நிலையில், அர்ஜெண்டினா கால்பந்து அணியினை மீண்டெழ வைப்பாரா மெஸ்ஸி? இதுபோன்ற மேலும் பல வல்லுநர்களின் விமர்சனங்களை #ஸ்டார்ஸ்போர்ட்ஸ்2 #ஸ்டார்ஸ்போர்ட்ஸ்2ஹெச்டி யில் #புட்பால்யுனைடட் நிகழ்ச்சியில் கண்டு மகிழுங்கள்...
2.
INSTAGRAM: Rewrite the caption for this
post (please tag persons/pages, where required):
https://www.instagram.com/p/Bi46zUPl59Y/?taken-by=starsportsindia
CAPTION: சூப்பர்மேன்னின் சூப்பர் கேட்ச்! ஏ.பி.டி பவுண்டரிக்கு மேல் செல்லும்
பந்தினை பறவையாய் பறந்து பிடிக்கும் அற்புத காட்சி...
SUGGESTED HASHTAGS:
#எஸ்.ஆர்.ஹெச்Vsஆர்.சி.பி #ஐ.பி.எல் #ஏ.பி.டெவிலியர்ஸ் #ஏ.பி.டி #ஆர்.சி.பி #சிறந்தபீல்டிங் #சூப்பர்கேட்ச் #சூப்பர்மேன்
3.
FACEBOOK: Rewrite the copy for this
infographic (please tag persons/pages, where required):
https://www.facebook.com/PBLlndiaLive/photos/a.911726125577446.1073741828.911590928924299/1218679744882081/?type=3&theater
POST COPY:
மகாவ் மற்றும் சீன ஓபன்
வெற்றிக்குப்பின் புத்தெழுச்சியினைப் பெற்றுள்ள @PVSindhu.OGQ நமது @ChennaiSmashers அணியினை அதன்
முதலாவது @PBLIndiaLive பட்டம் வெல்ல வைப்பார் என்பதே அனைவரது
எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
#ப்ரோபாட்மின்ட்டன்லீக் #சென்னைஸ்மேஷர்ஸ் #பி.வி.சிந்து
4.
TWITTER:Rewrite the tweet copy for this
infographic (please tag persons/pages, where required):
https://twitter.com/IndSuperLeague/status/829307634939473924
TWEET COPY:
கிறிஸ்டியன் வடாக்ஸ் @MumbaiCityFC
யின் மத்தியக்களத்தில் எதிர்அணியினருக்கு சிம்ம
சொப்பனமாக இந்தாண்டு விளங்குவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
#ஐ.எஸ்.எல்2019 #சிறந்தவீரர்கள் #மும்பைசிட்டிஎப்சி #கிறிஸ்டியன்வாடாக்ஸ் #ஐஎஸ்எல்நாயகர்கள் #வீரர்புள்ளிவிவரங்கள்
5.
FACEBOOK: Rewrite the copy for these
native video posts (please tag persons/pages, where required):
https://www.facebook.com/starsportsindia/videos/1415321458612389/
COPY:
இந்திய அணி அதன் ஆதிக்கத்தைத் தொடருமா?
#துபாய்கபடி2018 போட்டியின் அரையிறுதியில் நுழைந்துள்ள இந்திய கபடி அணி அதன்
திறமைக்கான மிகப்பெரிய பரீட்சையை சந்திக்க உள்ளது. பாகிஸ்தான் அணியை @AjayThakur யின் துணையுடன் ஓடஓட
விரட்டியடித்ததுடன், கென்ய அணியினை @rishankdevadiga777 வின் நேர்த்தியான ஆட்டத்தினால் கலங்கடித்த #இந்தியஅணி, எதிர்வரும் இந்த சவாலையும் முறியடித்து
இறுதிப்போட்டியில் நிச்சயம் காலடி எடுத்து வைக்கும். இப்போட்டியின் நிகழ்வுகளை
உடனுக்குடன் #ஸ்டார்ஸ்போர்ட்ஸ்இந்தியா வில் 2018 ஜூன் 29 ஆம் நாள்
காணத்தவறாதீர்கள்.
https://www.facebook.com/P1India/videos/218945251902679/
COPY:
“இந்தியக் கடலின் கிராண்ட்பிரிக்ஸ்
போட்டியென அழைக்கப்படும் @P1India இந்தாண்டும் சீரும் சிறப்புமாய்
நடைபெறும்”, என பவர்போட் பி1-யின் நிர்வாக இயக்குனர் திரு.ராபர்ட் விக்ஸ் நம்பிக்கை
தெரிவித்துள்ளார். மேலும் அவர் மும்பை நகரம் குறித்தும், இது போன்ற மாபெரும் போட்டியினை நடத்தும் அதன் திறன் குறித்தும்
மிகுந்த உற்சாகத்துடன் பேட்டியளித்தார்...
#பிஒன்இந்தியா #பவர்போட்பிஒன் #ராபர்ட்விக்ஸ் #மும்பைபடகுப்போட்டி
6.
How would you promote the video section
of the IPTL Facebook page? https://www.facebook.com/pg/IPTL/videos/.
Write a post for Facebook and Twitter linking to the above:
Facebook:
நாம் யாரும் அறிந்திராத அரிய
விளையாட்டு செய்திகள் முதல் வீரர்கள் குறித்த கிசுகிசுக்கள் மற்றும் கண் கவரும்
வெற்றிக் கொண்டாட்டங்கள் வரை, விளையாட்டு ஆர்வலர்கள் விரும்பும்
அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களும் படைத்த காணொளிகள் @IPTL யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. உடனே
கீழ்கண்ட லிங்க்கினை கிளிக் செய்து ஐ.பி..டி.எல் போட்டிகள் குறித்த மதிப்புமிக்க
தகவல்கல்களைப் பெறுங்கள்:
https://www.facebook.com/pg/IPTL/videos/
#ஐபிடிஎல்காணொளிகள் #ஐபிடிஎல்நேர்காணல்கள் #டென்னிஸ் #ஐபிடிஎல்பேஸ்புக்பக்கம்
Twitter:
லீக் டென்னிஸ் போட்டிகள்
சுவாரசியமற்றவை என யார் சொன்னார்கள்? எங்கள் பேஸ்புக்
காணொளிகளின் மூலம் ஐ.பி.டி.எல் குறித்த புத்தம்புது செய்திகள், காரசாரமான நேர்காணல்கள்,
தெரிந்திராத உண்மை தகவல்கள் மற்றும் வீரர்களின்
அறிந்திராத முகங்கள் போன்ற மேலும் பலவற்றை அறிய இங்கு சொடுக்கவும்:
https://www.facebook.com/pg/IPTL/videos/
#ஐபிடிஎல் #ஐபிடிஎல்செய்திகள் #சுவாரசியஐபிடிஎல்தகவல்கள் #ஐபிடிஎல்பேஸ்புக்பக்கம் #ஐபிடிஎல்காணொளிகள்
#ஐபிடிஎல்நேர்காணல்கள்
7.
GIFs are a fun way of showcasing action.
Write Facebook and Twitter copy for the following GIF:
https://www.facebook.com/starsportsindia/videos/1417687791709089/
Facebook:
எவராலும் கணிக்க முடியாததே #கபடிவிளையாட்டு. அதற்கு மற்றுமொரு சான்று இதோ...
ஈரான் நாட்டு
தடுப்பாட்டக்காரர்களிடமிருந்து மயிரிழையில் தப்பிய இந்திய ரெய்டர் ரிஷாங் தேவடிகா,
தன்னிடம் இருந்து விலகியோடும்
தடுப்பாட்டக்காரர்களை பாய்ந்து அவுட் செய்து நிலைமையை தனக்கு சாதகமாக்க முயலும்
காட்சி! இது போன்ற பல மயிர் கூச்செறியும் #ஈரான்Vs இந்தியா விளையாட்டு நிகழ்வுகளை #கபடிமாஸ்டர்ஸ்இறுதிப்போட்டிதுபாய்2018 யில் #ஸ்டார்ஸ்போர்ட்ஸ்இந்தியா
தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்!
Twitter:
‘இந்த ரெய்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’
இந்திய அணியின் நட்சத்திர ரெய்டர்
ரிஷாங் தேவடிகாவுக்கு உடம்பெல்லாம் மச்சம் போல! சைக்கிள் கேப்பில்
தடுப்பாட்டக்காரர்களிடம் பிடிபடாமல் தப்பிய அவர், எல்லைக்கோட்டினை தாண்டும்முன் தனது எதிர்அணியினரையும் வெளியேற்ற
முயலும் அரிய தருணம் உங்கள் பார்வைக்கு!
#இந்தியாVsஈரான் #கபடிமாஸ்டர்ஸ்பைனல்ஸ்
#துபாய்கபடி2018 #ரிஷாங்
தேவடிகா
Comments
Post a Comment