அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில், ஒரு போலீஸ் அதிகாரி உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சம்பவம் பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. கிம்ப்ரோ என்னும் அந்த அதிகாரி, சாலையில் அதிக வேகத்தில் வந்த ஒரு காரினை மடக்கிப் பிடித்தார்.
"ஏன் வேகமாக வண்டி ஓட்டினீர்கள்?" என கிம்ப்ரோ அவ்வாகனத்தை ஒட்டிய பெண்மணியிடம் கேட்டபோது, அவர் பிறந்து பன்னிரண்டு நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தை, பாட்டிலில் இருந்த எதையோ பருகியவுடன் மூச்சு விட முடியாமல் தவிப்பதாய் தெரிவித்தார். பெரிதும் வைரலாகி உள்ள அந்த பேஸ்புக் வீடியோவினை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்:
https://www.facebook.com/
உடனே, அந்த அதிகாரி அக்குழந்தைக்கு முதலுதவி செய்ததுடன் அதற்கு மெல்ல தடவிக் கொடுத்து, அதன் வாயில் விரலினை விட்டு மூச்சுக்குழாயினை திறக்க வைத்து மீண்டும் சுவாசிக்க உதவி செய்தார். சபாஷ் கிம்ப்ரோ!!!
Comments
Post a Comment