நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் பரபரப்பு நிலவியது. 100 ஓவர்கள் முடிந்த நிலையிலும், இரண்டு அணிகளாலும் வெற்றி பெற முடியாத நிலையில் ஆட்டம், சூப்பர் ஓவருக்கு சென்றது. அந்த சூப்பர் வரும் டை ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்த காரணத்தால், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஐ.சி.சி. யின் இந்த விதியிற்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஒரு சில முன்னாள் வீரர்களின் கருத்து உங்கள் பார்வைக்கு:
"நல்ல வேலை செய்துளீர்கள் ஐ.சி.சி. நீங்கள் நகைப்புக்குரியவர்கள் தான்!"
- நியூஸிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் 'ஸ்காட் ஸ்டைரிஸ்'.
"நடைமுறைக்கு ஒத்து வராத விதிகளின் மூலம் இங்கிலாந்து வென்றுள்ளது. உண்மையில் இரண்டு அணிகளும் வென்றதாக அறிவித்திருக்க வேண்டும்."
- முன்னாள் இந்திய வீரர் 'பிஷன் சிங் பேடி".
"இறுதி முடிவு பவுண்டரிகளை வைத்து மட்டும் எடுக்கப்படுவது ஏற்புடையதல்ல"
- முன்னாள் ஆஸ்திரிலேய வீரர் 'டீன் ஜோன்ஸ்'.
"நான் ஏமாற்றப்பட்டதைப் போல் உணர்கிறேன்"
- முன்னாள் நியூஸிலாந்து வீரர் 'டியான் நாஷ்'.
"இவ்வளவு முக்கியமான போட்டியின் முடிவு இவ்வாறு வினோதமாக நிர்ணயிக்கப்படுவது எனக்கு புரியவில்லை. இந்த விதி கேலிக்குரியது!"
- முன்னாள் இந்திய வீரர் 'கவுதம் கம்பீர்'.
"எனக்கு இந்த விதியில் உடன்பாடில்லை. ஆனால், இந்த விதி பல நாட்களுக்கு முன்பே ஐ.சி.சி யால் உருவாக்கப்பட்டுள்ளதால் நாம் அதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்"
- முன்னாள் இந்திய வீரர் 'யுவராஜ் சிங்'.
எது எப்படியோ, கிரிக்கெட் என்னும் விளையாட்டு ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை அடிப்படையாய் கொண்டிருக்கும் போது ரன்கள் சம நிலையில் இருக்கும் போது, விக்கெட்டுகளை கணக்கில் கொண்டே போட்டி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இதனை ஐ.சி.சி. ஒத்துக்குமா?
Comments
Post a Comment