மயிரிழையில் சீன பெண் உயிர் தப்பினார்!

Image result for MIRACLE


சீனாவின் கன்சோ பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், திடீரென சுவர் இடிந்து விழுந்தபோது சுதாரித்துக்கொண்டு உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி உள்ளது. சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்மணி திடீரென சுவர் விழுவதை கண்டவுடன், வந்த வழியே திரும்ப ஓடி சென்று உயிர் தப்பிய வீடியோவின் லிங்க் இதோ:

 https://youtu.be/-gA2SEfICWE

இடிந்து விழுந்த அந்த சுவரினை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவே நாளடைவில் அந்த சுவரினை பலவீனப்படுத்தி இடிந்து விழ வைத்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒரு சாலை முழுக்க அமைந்துள்ள அந்த சுவர், அதை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பலவற்றின் மீது விழுவதுடன், அந்த பெண்மணியின் உயிருக்கே ஆபத்தாய் மாற இருந்ததையும் பார்க்கும்போது ஏதோ ஹாலிவுட் படம் பார்ப்பது போலவே உள்ளது!

Comments