நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றதுடன், இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரிதும் துணை புரிந்தவர் பென் ஸ்டோக்ஸ். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க முயன்றபோது, பீல்டர் கப்டில் ரன் அவுட் செய்ய வீசிய பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு சென்றது.
இதனால், 2 ரன் எடுத்திருக்க வேண்டிய பந்தில் 6 ரன்கள் கிடைத்ததுடன் அந்த ரன்கள் இங்கிலாந்து அணி ஆட்டத்தை ட்ரா செய்யவும் பெரிதும் உதவியது. இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டோக்ஸ், "கடைசி ஓவரில் என்னை ரன் அவுட் செய்ய வீசிய பந்து எனது பேட்டில் பட்டு 4 ரன்கள் கூடுதலாய் கிடைத்திருந்தாலும், அந்த தவறுக்காக நான் என் வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனுக்கு மன்னிப்பு கேட்டாலும் ஈடாகாது. நாங்கள் வெல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது என நான் எண்ணுகிறேன்", என்றார்.
ஆட்டம் டை ஆனதால், நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் 15 ரன்கள் எடுத்திருந்தாலும், அதிக பவுண்டரிகள் அடித்திருந்த இங்கிலாந்து அணி 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.
Comments
Post a Comment