சந்திரயான்-2 விற்கு யார் கண் பட்டுச்சோ?

Image result for CHANDRAYAAN 2

இந்தியாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் ராக்கெட்டினை ஏவுவதற்கான நேரம், சரியாக  அதனை ஏவுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2:51 னிற்கு ஏவப்படுவதாய் இருந்த சந்திரயான்-2 ராக்கெட்டினை, ஏவும் நேரத்தினை தள்ளி வைப்பதாக பணி கட்டுப்பாட்டு மையம் காலை 1:55 க்கு அறிவித்தது.

"ஒரு தொழில் நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால், பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று ஏவும் முயற்சி கைவிடப்பட்டு இருப்பதாக இஸ்ரோவின் மக்கள் தொடர்பு இயக்குனர் பி.ஆர். குரு பிரசாத் தெரிவித்தார். மற்றொரு அதிகாரி, "ஏவுவது இன்று சாத்தியமில்லை என்றும், விரைவில் ராக்கெட்டினை ஏவும் நாள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரோவின் மிகப் பெரிய திட்டமாக கருதப்படும் சந்திராயன்-2 ஆனது வெற்றி அடைந்தால், நிலவில் வெற்றிகரமாய் விண்கலத்தினை இறக்கிய நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவோடு இந்தியாவும் சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை காண இன்று ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருகை தந்த இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஏமாற்றத்துடன் திரும்பினாராம். சீக்கிரம் சிக்கல்களை தீர்த்து லான்ச் பண்ணுங்கப்பா...

Comments