எனது நெருங்கிய தோழன்- ‘அருண் ராஜன்’. அவனை நான்
எனது முன்னாள் நிறுவனத்தில் பணிபுரியும்போது சந்தித்தேன். எனக்குப் பின் பணியில்
சேர்ந்ததால், அவன் என்னிடம் நிறையப் பணி குறித்த சந்தேகங்களைக் கேட்டறிவதுடன்,
என்னுடன் சேர்ந்து உண்பது மற்றும் தேநீர் அருந்துவது போன்றவற்றின் மூலம்
நெருக்கமானான். வெகு விரைவிலேயே பணியில் சிறந்து விளங்கத் தொடங்கிய அருண்
அவ்வப்போது எனக்கும் அதிகப் பணிச்சுமையின் போது உதவுவான்.
மேலும் வார இறுதி நாட்களில், எனக்காக வெகு
தொலைவில் உள்ள தன் வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து வருவான்.
பல்வேறு பூங்காக்கள், கடற்கரை, அருங்காட்சியகம் மற்றும் முக்கிய
நிகழ்ச்சிகளுக்கும் என்னை அவனது வாகனத்தில் அழைத்துச் செல்வான். அது தவிர எனக்குத்
தெரியாத வருமான வரி தாக்கல் செய்தல், புதிய வேலைக்கு விண்ணப்பித்தல் போன்ற
செயல்களுக்கும் பெரிதும் உதவியுள்ளான்.
நாங்கள் இருவரும் பிற்காலத்தில் வெவ்வேறு
நிறுவனங்களுக்குப் பணி மாறி சென்று விட்ட போதிலும், இன்றளவும் என்னுடன் நெருங்கிய
தொடர்பில் இருப்பதுடன், நான் சோர்ந்து போகும் தருணங்களில் உற்சாகம் அளிக்கும்
வகையில் என்னை ஊக்குவிப்பதுடன், எனக்கு உற்ற உயிர்த்தோழனாகவும் விளங்குகிறான்
அருண்!
Comments
Post a Comment