சர்க்கரை நோய் வராமல் தடுக்க சிறந்த வழிமுறைகள்


Control diabetes


நீரிழிவு நோய் ஆரம்பக்கட்டத்தில் உள்ள போது, சில தடுப்புமுறைகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லையெனில் அடுத்த ஆண்டுகளில் சர்க்கரை நோய் உங்களுக்கு நிச்சயம் வந்து விடும்.

எனவே கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை நோய் வருவதை பெருமளவில் குறைக்கலாம். அவை இதோ:

1.    வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது, முப்பது நிமிடங்கள் முதல் ஒரு சில மணி நேரங்கள் வரை நன்றாக இரண்டு கைகளையும் வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் நம் ரத்தத்தில் சேரும்  சர்க்கரையின் அளவு பெரிதும் குறையும்.

2.    அதிகம் சிகரெட் பிடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று பல நோய்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு இருந்தாலும், அதனோடு கூடுதலாக ரத்தத்தில் சர்க்கரையின்  அளவும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோயிலிருந்து தப்ப அவசியம் சிகரெட் குடிப்பதை உடனே விட்டொழிக்க வேண்டும்.

3.    நம்மில் பெரும்பாலானோர் தினமும் மாலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியினை பார்க்கின்றனர். இதனால் அவர்களின் உடலுக்கு போதிய உடல் உழைப்பு கிடைப்பதில்லை. அதனோடு அவ்வாறு நிகழ்சிகளைப் பார்த்தவாறு நிறைய எண்ணெய் நிறைந்த நொறுக்கு  தீனிகளை உண்கின்றனர். இதனால் நீரிழிவு நோய் ஏற்படும். இதனை தடுக்க மாலை வேளைகளில் விளையாட்டு அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.



4.    நாம் அனுதினமும் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவினை கூட்டுகின்றன. இதனை தடுக்க ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால்  ஏதாவது ஒரு வகையில் தினசரி குறைந்தது 5 மில்லி ஆலிவ் ஆயிலை உட்கொள்ள வேண்டியது அவசியம்.


Image result for diabetes control


5. சர்க்கரை, உப்பு, அரிசி, மைதா, சாதம், பால், தயிர், தேங்காய் உள்ளிட்ட வெள்ளை நிறம் படைத்த உணவுப்பொருள்களை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் பேக்கரிகளில் விற்கப்படும்  எல்லா பொருள்களும் ரத்த சர்க்கரையை கூட்டக்கூடியது என்பதால் அவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும்.

6. ஒவ்வொரு நாளும் மூன்று வேளையாக உண்ணும் பழக்கத்தினை 5 வேளையாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், மூன்று வேளைகளாக சாப்பிடும் அதே உணவு அளவை ஐந்து வேளைகளில் பிரித்து சாப்பிட வேண்டும்.


7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு மருத்துவர் பரிந்துரைக்கும் அளவை விட கூடாமல் தடுக்கும். பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள், வால்நட்,  பாதாம்பருப்பு, நிறைய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.


8. பிரட், பாஸ்தா ஆகிய உணவு வகைகளில் அதிகளவில் மாவுசத்து உள்ளது. நீரிழிவு நோயை தடுப்பதற்கு இந்தவகை மாவுசத்து உணவு வகைகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட கறி உணவினை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்.


9. புரதசத்துக்காக மீன், முட்டை,பயறு வகை உணவினை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் மீன் இறைச்சியை வறுத்து உண்பதை தவிர்க்க வேண்டும். பழங்கள் எடுத்துக்கொள்ளும்போது அவற்றில் அதிகளவிலான விட்டமின், மினரல் மற்றும் நார்சத்து உள்ளதால் உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் துணை புரியும். 


10. உடற்பயிற்சி உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இது உடல் எடையை கட்டுக்குள் வைப்பதுடன் ரத்தத்தில் சக்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.


11. கொழுப்பு சத்தும் நல்ல ஆரோக்கியமான உடல்நிலைக்கு ஏற்றது என்றாலும், அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ள கூடாது. எனினும் ஆலிவ் எண்ணெய், மீன் கொழுப்பு உடலுக்கு நல்லது. அதுபோல ஆரோகியமான வாழ்விற்கு நீர்சத்து உடலில் எப்போதும் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


மேற்கூறிய அனைத்தையும்  கடைப்பிடித்தால் நமது வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. கூடுதலாக, ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள், தங்களது சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை அவ்வப்போது கண்டறிந்து, அதற்கான ஆலோசனையையும், சிகிச்சையையும் பெறுவது முக்கியம் ஆகும்.

Comments