எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு, பிரதமர் மோடி மதுரைக்கு வந்தது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கு. இதுக்கு முன்ன 2018 ஆம் வருஷம் பாதுகாப்பு கண்காட்சிக்காக மோடி சென்னை வந்தப்பவும், இதே ஹாஷ்டாக் தான் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி கலக்கியது. ஏன் இந்த மோடி வெறுப்பு அலை தமிழகத்தில் நிலவுதுனு பாப்போமா?
நம்ம நாடு சுதந்திரம் வாங்கின நாள் முதல், எல்லா அறிவியல் துறைகளிலும் நாம முதன்மை பெறணும் என்பது அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் கனவு. அந்த கனவை நனவாக்கும் விதமா 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவத்தை மேம்படுத்த AIIMS இன்ஸ்டிடியூட்ட டெல்லியில் திறந்தாங்க. அப்ப இருந்து இந்த AIIMS ஹாஸ்பிடல்கள் தான் தெற்காசிய அளவுல நம்ம மருத்துவ புகழ் பாடி வருது.
இந்த நிலையில நம்ம தமிழ் நாட்டுல இந்த AIIMS-அ மதுரையில அமைக்கணும்னு அன்றைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா பெரிய போராட்டத்திற்கு அப்புறம் ஒப்புதல் வாங்கினாங்க. அதுக்கப்புறம், இதுக்காக உத்தேசமா 6 இடங்களில் நிலமும் ஒதுக்கினாங்க. இது நடந்தது 2014 ஆம் ஆண்டு பிஜேபி பதவியேற்ற நேரத்துல! இப்ப ஏறக்குறைய நாலரை ஆண்டுகள் கழிந்து 2019 பாராளுமன்ற தேர்தலே வர போற நேரத்துல நம்ம பிரதமர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது தேர்தல் அரசியல் தவிர வேற என்னனு சொல்ல?
வெள்ளம்னா கேரளாவிற்கு பறந்தோடிய பிரதமர், அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கஜா புயல் நிவாரண பணிகளை பாக்க வராமல் தவிர்த்திட்டார். அதற்கு, பாதுகாப்பு குறைப்பாடு, #gobackModi ஹாஷ்டேக் மற்றும் கருப்பு கொடிகள் காட்டுனத சாக்கா சொன்ன பிரதமர், இப்ப எய்ம்ஸ் மருத்துவமனையினை அடிக்கல் நாட்டினதா கல்வெட்டில் தனது பேர பொறிச்சுக்க மட்டும் தமிழ்நாட்டுக்கு வரலாமா? அதனால தான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்னு எல்லா சமூக வலைத்தளங்களிலும் நம்ம யங்ஸ்டர்ஸ் அவங்க கோவத்த இந்த விதத்தில காட்டுறாங்க. என்னத்த சொல்ல! அவங்க பக்கமும் நியாயம் இருக்க தானே செய்யுது!
Comments
Post a Comment