ஒன் இந்தியா இணையதளத்திற்காக எழுதிய கட்டுரை: தமிழகத்தில் மறுபடியும் பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது அவசியமா?

Image result for engineering entrance exam


இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும் நிலையில் கிராமப்புற, ஏழை மாணவர்களின் உயர்கல்வி விகிதம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. அதாவது கிராமப்புற, ஏழை மாணவர்களில் 90 சதவீதத்திற்கு அதிகமானவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பதில்லை. இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட பிறகும் இப்படி ஒரு அவலநிலை தொடர்வதற்கு நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.





இத்தகைய பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டால் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படும். தமிழ்நாட்டில் முன்பு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் தொழில் படிப்புகளை படிக்க முடியாத நிலை இருந்தது.





கிராமப்புற மாணவர்களின் இந்த முன்னேற்றத்தை பறிக்கும் வகையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்வது சமூக நீதிக்கு எதிரானது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.





இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது ஊரக, ஏழை மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் பொறியியல் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும். தனியார் பயிற்சி மையங்களில் அதிக பணம் செலுத்தி படிக்கும் மாணவர்களால் மட்டுமே நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதால், பொறியியல் படிப்பு என்பது நகர்ப்புற, பணக்கார மாணவர்களுக்கானதாக மாறி விடும். இது உள்ளடக்கிய கல்வி வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது.

1980–
களில் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டதால் ஊரக மாணவர்களுக்கு இந்தப் படிப்புகள் எட்டாக் கனியாக மாறின. இத்தகைய நுழைவுத் தேர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சிதான் தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தியது. அதன் பயனாக தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பிறகு தான் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேரும் ஊரக, ஏழை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

எனவே சமூக நீதிக்கு பாதகமான பொது நுழைவுத்தேர்வு வேண்டாம் என்பதே எனது கருத்தாகும்.

Comments