ஒன் இந்தியாவிற்காக எழுதிய கட்டுரை: தொலைபேசி நேர்காணலில் சிறந்து விளங்க 10 ஆலோசனைகள்:



அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்தது அவர் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாய் அமைந்தது. அது அவரை உலக புகழ் அடைய செய்ததுடன், மக்களிடையே ஒருவித தொடர்பையும் உருவாக்கியது. மேலும் அது காலப்போக்கில், நிலப்பரப்புகளின் தொலைவை குறிப்பிடும் வகையில் குறைத்தது. நம்மில் ஒரு சிலரே அக்கண்டுப்பிடிப்பின் தாக்கத்தில் வெளியே வந்திருக்கிறோம் என்பதே உண்மை. ஆனால், கிரஹாம் பெல்லே தனது கண்டுபிடிப்பு உலகில் உள்ள பல்லாயிரம் கோடி பேர்களின் தலை எழுத்தை மாற்றுவதாய் இருக்கும் என்று உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இக்காலக்கட்டத்தில் தொலைபேசி நேர்காணல் பல நிறுவனங்களின் ஆள் சேர்ப்பு பணியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதற்கான காரணம், இவ்வகை தொலைபேசி நேர்கானல்களால், நேர்முக தேர்வை எதிர்கொள்வதற்கான நேரமும் செலவும் மிச்சமாவதே ஆகும். ஆனால் பல சமயங்களில் இவ்வகை தொலைபேசி நேர்காணல்கள் நேர்முக தேர்வுகளைவிட சவால் மிகுந்ததாய் விளங்குகிறது. ஏனெனில் இவ்வகை தேர்வுகளில் நமக்கு எதிர் முனையில் பேசுபவரின் முக பாவனைகளை நம்மால் சரியாக கணிக்க முடியாது. இவ்வகை தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற 10 ஆலோசனைகள் இதோ:

1.       உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
2.       நவநாகரீகமான தொனியில் பேசுங்கள்.
3.       உடல் மொழியை கருத்தில் கொள்ளுங்கள்.
4.       சுவிங்கம் மெல்லாதீர்கள்.
5.       நேர்காணல் முடியும் வரை துடிப்புடன் இருங்கள்.
6.       தொழில்நுட்ப கோளாறுகளை திறம்பட எதிர் கொள்ளுங்கள்.
7.       முக்கிய கருத்துக்களை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்.
8.       அனைத்தும் தெரிந்தவர் போல் காட்டி கொள்ளாதீர்கள்.
9.       நேர்காணலின் முடிவில் அடுத்த கட்ட நடைமுறையை அறிந்து கொள்ளுங்கள்.
10.   உங்கள் நன்றி உணர்வை காட்டுங்கள்.


சிறந்த வாழ்க்கை வழிகாட்டுதலுக்கு, ஒன் இந்தியாவின் கேரியர் இந்தியாவில் பதிவு செய்து, கல்வி மற்றும் வேலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற்று மகிழுங்கள்.

Comments