சொந்தஊர் செல்லும் அவசரத்தில் அரசு பேருந்தை ஓட்ட முயன்ற வாலிபர்!

Image result for maharashtra bus

மும்பை, ஏப்ரல் 15, 2018: மஹாராஷ்டிராவில் டிப்போவில் நின்றிருந்த அரசுப் பேருந்தை பயணிகள் சிலருடன் திருடிச் சென்று, மரத்தில் மோதி விபத்தை உண்டாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பொய்சரில் உள்ள டெப்போவில் பயணிகள் சிலருடன் அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும் டெப்போவின் உள்ளே பணி நிமித்தம் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சபிர் அலி என்ற இளைஞர், பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கினார். இதனால் அப்பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தாறுமாறாக பேருந்தை ஓட்டிய சபிர், சிறிது தூரத்தில் இருந்த மரத்தில் மோதினார். இதனால் பேருந்து விபத்தில் சிக்கியது.


ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்தைத் துரத்தி வந்த அப்பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும், சபீரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் சபீர் பால்கரில் வசித்து வருகிறார் என்றும், உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக அவர் பேருந்தை திருடியதும் தெரிய வந்துள்ளது. அவர் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Comments