மும்பை, ஏப்ரல் 15, 2018: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை
அணியும் பஞ்சாப் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன. மொஹாலியில் இரவு 8 மணிக்கு போட்டி நடக்க உள்ள இப்போட்டியில்
இத்தனை ஆண்டுகாலமாக சென்னை அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் பஞ்சாப் அணியை கேப்டனாக
இருந்து வழிநடத்துகிறார்.
அதுவும் சென்னை
அணியின் கேப்டன் டோனியின் செல்லப்பிள்ளையாக இவ்வளவு காலம் இருந்து வந்த அஸ்வின் அவரையே
எதிர்த்து விளையாட உள்ளது 'வளர்த்த கடா
மார்பில் பாய்ந்த கதை' போல் ஆகியுள்ளது.
முக்கியமாக சென்னை அணியில் விளையாடும் 90 சதவிகித வீரர்களின் பலம் பலவீனம் அஸ்வினுக்கு தெரியும். இதனால் கேப்டனாக
இருக்கும் அஸ்வின், சென்னையின் பல்ஸ்
பிடித்து முடிவுகளை மாற்ற முடியும். அதேபோல் அஸ்வினின் லெக் ஸ்பின் பற்றி சென்னை
அணிக்கு அதிகம் தெரியாது என்பதால், அதுவும் பஞ்சாப்
அணிக்கு அதிக பலன் தரும்.
இதுவரை அஸ்வின்
கேப்டனாக ஒரு வெற்றியையும் , ஒரு தோல்வியையும்
பதிவு செய்துள்ளார். கேப்டனாக அஷ்வினின் செயல்திறனை காண வாய்ப்பாக இப்போட்டி
அமைந்துள்ளதால், இதனை காண
ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். சென்னை அணிக்கு சப்போர்ட் செய்வதா,
அல்லது நம்மூர்காரர்
அஷ்வினுக்கு சப்போர்ட் செய்வதா என சி.எஸ்.கே ரசிகர்களே சற்று குழம்பி தான்
போயுள்ளனர்!
Comments
Post a Comment