ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? உஷார்...

Image result for pickle


நம்மில் பலருக்கு உணவில் ஊறுகாய் இன்றி ஒரு பருக்கை சோறும் உள் இறங்குவதில்லை. அந்த அளவுக்கு ஒரு அன்றாட உணவாக இது மாறிவிட்டது .  ஆனால், இப்படி தினமும் ஊறுகாயை எடுத்துக்கொண்டால் பல்வேறு உடல்நல பிரச்சனை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஊறுகாய் உண்பதால் உடலுக்கு ஏற்பட்டும் ஊறுகளின் பட்டியல் இதோ:

 # ஊறுகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்றில் பிடிப்புகளும் வழியும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கும் கூட ஏற்படும்.

# ஊறுகாயில் காரசாரத்திற்காக அதிகம் மசாலா கலவை சேர்க்கப்படுவதால், அல்சர் பிரச்சனை ஏற்படக்கூடும்.

# அன்றாடம் ஊறுகாய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் ஏற்பட கூடும்.

# நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து ஊறுகாயினை எடுத்துக் கொண்டார்களாயின் மோசமான நிலைமையை சந்திக்கக்கூடும்.

# ஊறுகாயில் உள்ள எண்ணெய் இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

# ஊறுகாயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.


ஆகவே, உணவில் சத்தான காய்கறிகளை சேர்த்துக் கொண்டு, படி படியாய் ஊறுகாயினை குறைப்போம். ஆரோக்கியமாய் வாழ்வோம்.

Comments