காஷ்மீரில்
இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி 'ஆஸிபா' 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு
கொல்லப்பட்டதும், அவ்வழக்கில்
தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டதையும் நாம் கேள்விப்பட்டு
அதிர்ச்சிக்குள்ளானோம். இந்நிலையில் சூரத்தில், 86 காயங்களுடன், மேலும் ஒரு 9 வயது சிறுமியின் உடலை போலீசார்
கண்டெடுத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள ஒரு
கிரிகெட் மைதானத்துக்கு அருகில், உடலில் 86 காயங்களுடன் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
5 மணி நேரத்துக்கும் மேலாக
நடந்த பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி, குறைந்தது 8 நாள்கள் பாலியல்
வன்கொடுமை மூலம் சித்திரவதை செய்யப்பட்டு, நீண்ட நேரம் உயிருக்குப் போராடி பின் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment