Freelance content created for an ad compaign

மகிழ்வூட்டும் ‘மின்மினி’ எடை எந்திரம்:


Image result for weighing machine

நாம் தினம் தினம் பொருட்கள் வாங்கும் காய்கறி, பலசரக்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களை எடையிடும் போது பல்வேறு முறைகேடுகள் நடப்பது நாம் அறிந்ததே. மேலும், இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருள் இழப்பும், அரசுக்கு பெருமளவு வருமான இழப்பும் ஏற்படுகிறது. சில சமயங்களில், தவறாக கூடுதலாக எடை இடுவதால் கடைக்காரர்களுக்கு வருமான இழப்பும் ஏற்படுகிறது. எனவே, இக்குறைகளை நிவர்த்தி செய்யவே எங்களது ‘மின்மினி’ எடை எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்களது எடை எந்திரத்தை கடைகளில் பயன்படுத்துவதால் கடைக்காரர்கள் சரியான எடையில் பொருட்களை விநியோகிக்க முடிவதுடன், அரசிடம் வரி ஏய்ப்பு செய்வதையும் தடுக்க முடியும். மேலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் கூட்டும் விதமாக 3,5 ஆகிய கிலோக்களில் எடை கற்களும் சரியான எடையினை உறுதி செய்து கொள்ள வைக்கப்படும்.

ஆக, இன்றே உங்கள் வணிகத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களை பெருக்கிடவும் எங்களது அதி நவீன ‘மின்மினி’ எடை எந்திரத்தை உபயோகப்படுத்த துவங்குங்கள்!

Comments