சென்னையை சேர்ந்த ஒரு
பிரபல நாளிதழ் நிகழ்த்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், 2017 ஆம் ஆண்டிற்கான ‘விரும்பத்தக்க ஆண்மகனாக’
அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நம்ப முடியவில்லையா? ஆம். விஜய், அஜித், சிவ
கார்த்திகேயன் உள்ளிட்ட பிரபல நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அனிருத் இந்த
பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதனால் மிகவும் குஷி
அடைந்துள்ள அனிருத், ட்விட்டரில், “ஒரு இசையமைப்பாளனான என்னை, நடிகர்களை தாண்டி
முதலிடம் பெற வைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது
ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும்,
இப்பட்டியலில் அனிருத், சிவ கார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், துருவ், துல்கர்
சல்மான், ராணா, தனுஷ், ஆரவ், ஹிப்ஹாப் ஆதி மற்றும் அதர்வா ஆகியோர் முதல் பத்து
இடங்களை பெற்றுள்ளனர்.
Comments
Post a Comment