நடிகர் விஜய்யின் 62 ஆம் தமிழ் படத்தின் தயாரிப்பு வேலைகள்
மும்முரமாய் நடந்து வரும் இவ்வேளையில், நடிகை பியா பஜ்பாய் இப்படத்தில் விஜய்க்கு
ஜோடியாய் நடிப்பதாய் கிசுகிசுக்கப்பட்டது. அதனால், விஜய் ரசிகர்களின்
சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகை பியா தான் இப்படத்தில்
நடிக்கவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தின் மூலம்
விஜய்யோடு மூன்றாம் முறையாக கூட்டணி சேருகிறார் இயக்குனர் முருகதாஸ்.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார். கதாநாயகியாக கீர்த்தி
சுரேஷ் நடிக்கிறார்.
Comments
Post a Comment