நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் சாதக பாதகங்கள்

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டமானது சமீபத்தில் தமிழக அளவில் பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. இது குறித்து அலசும் முன் இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இவ்வகையான திட்டங்கள்  நம் நாடு, எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்காக  மேற்கொள்ளப்படுகிறதுஇந்த திட்டத்திலும், நெடுவாசல் கிராமத்தில் அபரிதமாய்  உள்ள  மீத்தேன் எரிவாயுவே .என்.ஜி.சி நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த திட்டத்தினால் விளைநிலங்களுக்கு பாதிப்பு  ஏற்படும் என்பதாலேயே விவசாயிகள் இத்திட்டத்தினை எதிர்க்கின்றனர். செழிப்பான நிலமாய் திகழும் நெடுவாசல் கிராமத்தின் மண்ணில் மீ த்தேன்  எரிவாயு நிறைந்து  காணப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்த வாயுவை எரிபொருள் தேவைக்காக உறிந்து விடுவதால் மண் ஆனது மலட்டுத் தன்மையை  அடைவதுடன் , நிலத்தடி நீரும் பெருமளவில் பாதிப்படைகிறது. மேலும் இத்திட்டத்தினை செயல்படுத்தும் போது வெளியேறும் நச்சு வாயுக்கள் கிராம மக்களின் ஆரோக்கியத்திற்கும் கேடாய் மாறிவிடும் வாய்ப்புள்ளது.


 இந்நிலையில் இப்போராட்டமானது 20 நாட்களை கடந்து விட்ட  நிலையில், மத்திய-மாநில அரசுகள் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், சுமூகமாக இப்போராட்டத்தை முடித்து வைக்கும் பொறுப்பில் உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க, புதுப்பிக்கத்தக்க  சக்திகள் ஆன சூரிய-காற்று-கடலலை போன்றவற்றில் இருந்து நம் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதே  சரியாகும். இதனை இவ்விரு அரசாங்கங்களும்  வெகு  விரைவில் உணர்வார்கள்  என நம்புவோம்!  

Comments