நிதிஷின் பதிலும், நெட்டிசன்களின் பதிலடியும்!

Image result for nitish kumar


பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் சமீபத்தில் பூரண மது விலக்கைக் கொண்டு வந்தது நாம் அறிந்ததே. இந்த நடவடிக்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும், "நான் பீகாரில் முழு மதுவிலக்கைக் கொண்டு வந்ததில் பெருமகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்துள்ளேன்" என நிதிஷ் கூறினார். இந்நிலையில் நிதிஷ் சமீபத்தில், "பீகாரில் மதுவிலக்கு குறித்த பெரும் புரிதல் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏன் மக்களில் சிலர் மது அருந்த விரும்புகிறார்களோ? அவர்களை வேண்டுமென்றால் இருளில் கொஞ்சம் பழச்சாறைக் குடிக்க சொல்லுங்கள். அதுவும் மதுவை போலவே இருக்கும்!" என பேசிய பேச்சை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். "பாவம் நிதிஷ்க்கு யாரோ ரொம்ப மோசமான மதுவையோ, பழச்சாறையோ கொடுத்திருப்பார்கள் போல!" என்றும் "பீகாரில் எப்போது கரண்ட் இருந்திருக்கிறது? எப்போதும் இருளில் தானே குடித்துக் கொண்டிருக்கிறோம்" எனவும் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Comments