கோழிக்கோடு செல்லும் விமானம் மும்பையில் தரையிறங்கியது

Image result for aeroplane fight


பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் ஒன்று மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்துகொண்டிருந்த போது திடீரென ஒரு பயணி விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உணவுப் பொருட்கள் வைக்கும் வண்டியில் ஏறி அமர்ந்தும் சக பயணியிடம் கைகலப்பில் ஈடுபட்டும் இடையூறு ஏற்படுத்தினார். இதனால் விமானம் மும்பை விமான நிலையத்தில் காலை 9.15 மணிக்கு தரையிறக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட பயணி மத்திய தொழிலக பாதுகாப்பு  படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் விமானம் கிளம்பியது.

Comments