சோம்பலாய் இருப்பது பொருளாதாரத்திற்கு கேடு!

Image result for laziness


தினமும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் உலகப் பொருளாதாரத்துக்கு ஆண்டொன்றுக்கு 67 பில்லியன் டாலர்களுக்கும் மேல் செலவு வைக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சோம்பியிருப்பது என்ற விஷயம் உலக அளவில் தொற்று நோய் போல பரவிக்கிடக்கும் இந்த நிலையில், உலகுக்கு சுகாதாரச் செலவினங்களில் 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் 54 பில்லியன் டாலர்களையும், இழந்த உற்பத்தித் திறனால் சுமார் 13 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கும் செலவு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ நாளிதழ் 'லேன்செட்'டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments