"ஆளுமா டோலுமா" பாடலுக்கு ஆட்டம் போட்ட ரஷிய பெண்கள்!




நடிகர் அஜித் ரசிகர்களை இறங்கி குத்த வைத்த "ஆளுமா டோலுமா" பாடல் ரஷ்யர்களையும் விட்டு வைக்கவில்லை. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள உணவகம் ஒன்றின் முன், நடன கலைஞர்கள் ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். இப்பாடலுக்கு ஆடிய பெண்களின் நளினமான நடனமும் அவர்களது உடை அலங்காரமும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. ரஷ்யாவில் தனது பாடலுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இசையமைப்பாளர் அனிருத்துக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. வைரலாக YouTubeஇல் பரவி வரும் அக்காட்சியை காண வீடியோவை கிளிக் செய்யவும்.

Comments