எப்படி தயார் ஆகிறது திருப்பதி லட்டு?




அனுமார் வால் கணக்காய் வரிசையில் நின்று, கூட்டத்தில் முண்டியடித்து, லட்டு டோக்கன் பெற்று பயோமெட்ரிக் சோதனையை எல்லாம் தாண்டினால் தான் திருப்பதி லட்டு நம் வசமாகும். இத்தகு விசேஷமிகு லட்டின் ரெசிப்பி உங்களுக்கு தெரியுமா? கடலை மாவு, வெண்ணெய், சர்க்கரை, முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் கலந்து "பொட்டு" என்னும் ரகசிய சமையலறையில் தினமும் 3 லட்சம் லட்டுகள் வீதம் தயாரிக்கப்படுகிறது. இதன் சிறப்பால் 2009 ஆம் ஆண்டு ஜி.ஐ எனப்படும் தர சான்றும் இதற்கு கிட்டியுள்ளது. ஏறக்குறைய 300 ஆண்டுகளாய் இந்த திருமலை பிரசாதத்தை தயாரிக்கும் ரகசியம் காக்கப்படுகிறது!

Comments