‘ஜெயலலிதாவை பின்பற்றுவதில் என்ன தவறு?!’ -கனிமொழி ஆதங்கம்:




'அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தனித்துக் களமிறங்க வேண்டும். கூட்டணிகளை நம்புவதால் பலவீனப்பட்டே வந்திருக்கிறோம்' என கருணாநிதியிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து இடங்களை ஒதுக்கினால், அ.தி.மு.கவுக்கு அவ்விடங்களை தாரை வார்த்தது போல் ஆகிவிடும். சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடந்தது. எனவே பிற கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களிலும் தாங்களே போட்டியிட்டால், அதிக இடங்களையும் கவுன்சிலர்களையும் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தி.மு.க கருதுகிறது. 

Comments