பெருகி வரும் போலி சிம்கார்டுகள்:





வெளிநாடுகளில் சிம்கார்டுகள் பெறுவது குதிரைக்கொம்பாய் உள்ள நிலையில் நம் நாட்டில் மானாவாரியாக சிம்கார்டுகள் விநியோகிக்கபடுகின்றன. சமீபத்தில் கோவையில் பிஆர்பி காலனியில்  போலி அடையாள சான்றுகளை பயன்படுத்தி 4 நாட்களில் 580 சிம்கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கும் மையங்கள் அரசு அலுவலகங்களில் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களிலிருந்து அடையாள சான்றுகளை பெற்று இவ்வேலையில் ஈடுபடுகின்றன. இனியாவது ட்ராயும் கைபேசி நிறுவனங்களும் பொறுப்பாய் நடந்து கொள்ளுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்...

Comments