திருட்டு வழக்கில் குழந்தைக்கு சிறை- நீதிமன்றம் கண்டனம்:




மதுரையில் குற்ற வழக்கில் தொடர்புடையதாக கூறி 3 வயது குழந்தையை ரிமாண்ட் செய்துள்ளனர். ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களோடு இருந்த குழந்தையையும் சேர்த்து கைது செய்தனர். குற்றம் செய்த சிறுவர்களையே சிறைக்கு அனுப்பாமல் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கையில், விவரம் அறியா குழந்தையை சிறைக்கு அனுப்பியது சமூக ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்பின் குழந்தை தாயிடம் சேர்க்கப்பட்டு குழந்தையை சிறைக்கு அனுப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Comments