பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சவால்:





'டெல்லியின் வளர்ச்சித் திட்டங்களை முடிந்தால் தடுத்துப் பாருங்கள், ஆத்மி அரசின் சீர்திருத்தக் கொள்கைகளைத் துணிவிருந்தால் நிறுத்திப் பாருங்கள்' என்று மோடிக்கு கெஜ்ரிவால் சவால் விட்டுள்ளார். மத்திய அரசு அனைத்து விசாரணை அமைப்புகளையும் தங்களுக்கு எதிராக தூண்டி விட்டாலும் ஆம் ஆத்மிக்கு எதிராக ஓர் ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர்களால் ஆதாரங்களுடன் வெளிப்படுத்த இயலாது என்றார். மேலும் தன் மேல் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை எனவும் காழ்ப்புணர்ச்சியோடே அவை ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments