உடற்பயிற்சியால் அமர்ந்து பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பலாம்!





சமீப ஆய்வில் பணியிடத்தில் அதிக நேரம் அமர்ந்தே இருப்பவர்கள் 1 மணி நேரம் உடல் உழைப்பை மேற்கொள்வதால், ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பலாம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் அமர்ந்து பணிப்புரிபவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு பிறரை காட்டிலும் 60% அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது. இதற்காக நாம் ஜிம்முக்கு போகாவிட்டாலும் மதியம் அல்லது இரவு உணவுக்கு பின் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியே போதுமானதாம். இந்த ஆய்வு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

Comments