
தமிழக அரசு சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தை சட்டை செய்வதில்லை என புகார் கிளம்பியுள்ளது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வக்கீல்கள் பி.டி.ஆஷா, சுந்தர் ஆகியோரை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டு கொண்டது. அதனடிப்படையில் நூலகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் நூலகத்தை பராமரிக்க தனியார் அமைப்பு ஒன்றை கோர்ட் உருவாக்கும் என்றும் அதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தனர்.
Comments
Post a Comment