தனித்துவமான முகம், கவர்ந்திழுக்கும் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற கோடுகள்
என பூனை இனங்களின் பெரிய விலங்காக விளங்குவது புலி இனம். இந்த இனத்தின் அழிவை தடுத்து நிறுத்துவதற்கும், புலிகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் 2010 ம் ஆண்டில் ஜுலை 29 ம் தேதியை உலக புலிகள் தினமாக அறிவித்தனர். பல்லுயிர் பெருக்கத்தை தக்க வைப்பதற்கும், காடுகளை அழிவில் இருந்து காப்பதற்கும் புலிகள் தேவை. காடுகளைக் காக்க உதவும் புலிகளை நாம் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். புலியை தேசிய விலங்காய் அறிவித்த நாமாவது புலிகளை இனி காப்போமா?
Comments
Post a Comment