பாம்பிடம் இருந்து தன் குட்டியை காப்பாற்றிய தாய் எலி!




பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பர். மனிதர்களே கண்டால் பயப்படக்கூடிய ஒரு விஷமுள்ள பாம்பை ஒரு எலி ஓட ஓட விரட்டியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் கொடுக்கப்பட்டுள்ள உருக்கமான வீடியோவில் கடும் பசியுடன் ஒரு எலிக்குட்டியை விழுங்க முற்படும் கொடிய விஷமுள்ள பாம்பினை அந்த எலிக்குட்டியின் தாய் தாயன்புடன் சிறிதும் பயமின்றி விரட்டிச் சென்றுள்ளது! இதில் வேடிக்கை என்னவென்றால் பாம்பு எலிக்குட்டியை விட்டு விட்டபோதிலும் தாய் எலி விடாமல் பாம்பை துரத்திச்சென்று தாக்கியது அதன் பரந்த தாயுள்ளத்தைக் காட்டுகிறது.



Comments