இந்தியாவின் மகளிர் டென்னிஸ் வீராங்கனை சானியா தனது சுயசரிதையான "ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்" என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். இதன் வெளியீட்டு விழாவில் பேசிய சானியா தன்னை தேசப்பற்று இல்லாதவர் என்று மக்கள் விமர்சித்த போது மிகவும் மனம் வருந்தியதாய் தெரிவித்தார். தான் பாகிஸ்தான் நாட்டவரான ஷோயிப் மாலிக்கை மணமுடித்ததால் இந்த கோஷம் மேலும் வலுத்ததாகவும் தன் கணவர் அளித்த ஊக்கத்தாலேயே தான் இக்குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வந்ததாகவும் கூறினார். 20 கோடி பேர் வசைந்தாலும் பாராட்ட 100 கோடி பேர் இருக்கும் போது சானியாவின் வெற்றி பயணம் தொடரும் என்பதில்
எள்ளளவும் ஐயமில்லை.
Comments
Post a Comment