ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை
ஒதுக்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ்
அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க தலைநகரான பிரிட்டோரியாவில் நெல்சன்
மண்டேலாவின் பிறந்தநாள் நினைவு கருத்தரங்கில் இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் எவ்வாறு மண்டேலா தனது பொது
வாழ்விற்கு வழிகாட்டியாய் இருந்தார் என்பதையும், அவர் தன்னிடம் தேர்தலில் பங்கேற்க 1994இல் உதவி கோரியதையும் நினைவு கூர்ந்தார். இதற்கு முன்னும் இதே காரணத்திற்காக 9 பில்லியன் அமெரிக்க டாலர் அவர் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment