இந்தியாவிற்கே முன்னுதாரணமாய் திகழும் ஓர் அற்புத மாவட்டம்!




தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் போக்குவரத்து சட்டங்களை மீறுபவர்களுக்கு 'மரம் நடுதல்' எனும் வினோத தண்டனை வழங்கப்படுகிறது. விசாரித்ததில் அம்மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ரேமா அவர்களே கடந்த 3 வாரங்களாக இந்த விசித்திர தண்டனையை செயல்படுத்துவதாக தெரிகிறது. இதனால் இதுவரை 2,765 பேர், நகரமெங்கும் 10 லட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகளை நட்டுள்ளனர். ‘Rahadari Naa Nestham’ என்ற திட்டத்தின் ஓர் பகுதியாக புத்துயிரை உருவாக்குதல் மற்றும் பேணுதல் ஆகியவற்றை வலியுறுத்தவே இத்தண்டனை அளிக்கப்படுவதாய் ரேமா கூறினார்.

Comments