தி.மு.கவில் இணைந்தார் பழ.கருப்பையா:






அ.தி.மு.கவின் முன்னாள் துறைமுக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பழ.கருப்பையா அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். "அ.தி.மு.கவிலிருந்து விலகிய பின் நான் தி.மு.கவையே சுற்றி சுற்றி வந்தேன். மனதளவிலும் உடலளவிலும் அப்போதே நான் தி.மு.கவில் இணைந்துவிட்டேன். இனி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க தலைவர்களுடன் இணைந்து திராவிட இயக்க வளர்ச்சிக்கு பாடுபடுவேன்" என்று தெரிவித்தார். அம்மாவின் தீவிர விசுவாசியாக இருந்த இவர் ஒரு காலத்தில் "கருணாநிதி என்ன கடவுளா?" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்!

Comments