'ரிலையன்ஸை வளர்த்துவிடுவதே ரிசர்வ் வங்கிதான்'!- கிருஷ்ணன்





தற்போது நாட்டையே உலுக்கி வரும் சம்பவம் ஸ்டேட் பாங்கு வங்கியின் கல்வி கடன்களை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலிப்பதால் அரங்கேறி வரும் தற்கொலை சம்பவங்கள் தான்! இதுகுறித்து வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் சி.பி. கிருஷ்ணன், " இன்னமும் ரிலையன்ஸ் நிறுவனம் வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. ரிசர்வ் வங்கியின் துணையோடுதான் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 42 ஆயிரம் கணக்குகளை வசூலிப்பதற்காக, மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்" என்றார். இதற்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Comments