ஏன் கைக்கடிகாரங்கள் இடது கையில் கட்டப்படுகின்றன?




உலகையே ஆண்ட கைக்கடிகாரங்கள் ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு பின் மதிப்பிழந்தன. ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள 'ஸ்மார்ட் வாட்ச்' மக்களின்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அவை ஏன் இடக்கையிலே பொதுவாக கட்டப்படுகிறது? கைக்கடிகார காலத்திற்கு முன்பு பாக்கெட் கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டது. அப்போது வலது கையால் பணி புரியும் போது கடிகாரத்தை எடுக்க இடது பாக்கெட்டில் வைப்பதே ஏதுவாக இருந்தது. மேலும் வலக்கையில் கட்டினால் வாட்ச்சில் சிராய்ப்புகள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படவும் வாயப்பிருந்ததால் இடக்கையில் கட்டுவதே வழக்கமானது!

Comments