
உடலளவிலும் மனதளவிலும் ஏற்படும் சிக்கல்களுக்கு அருமருந்தாய் விளங்கும் யோகாவின் பலன்கள் எண்ணற்றவை. தொடர்ந்து யோகா செய்வதால் மன அமைதியும், நல்ல மனநிலை மாற்றமும் கிடைக்கும். இக்கலையை பயில்வதால் கவனக்குறைவையும், தூக்கமின்மையையும் விரட்டி அடிக்க முடியும். மிக எளிய யோகா கலையை பின்பற்றினால் நம் உடலுக்கு நெகிழ்வு தன்மை கிடைப்பதால் விளையாட்டு வீரர்களுக்கு இக்கலை வரப்பிரசாதமாக விளங்குகிறது. மேலும் யோகா செய்வதால் மன தைரியமும், வலி நிவாரணமும் கிட்டும் என்பதால் நாமும் யோகா செய்வோமா?
Comments
Post a Comment