ஏ ஆர் ரஹ்மானிடம் பயந்தேன் - விராத் கோலீ:




உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கால்பந்து போட்டிக்கு "ஃபுட் சால்" என்று பெயர். இந்த விளையாட்டை இந்தியாவில் பிரபலப் படுத்த ஐ பி எல் ஸ்டைல் இல் லீக் போட்டிகள் நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விழாவில் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் கிரிக்கெட் சூறாவளி நம் விராத் கோலீ பாடுவதாய் அறிவிக்கப் பட்டு இருந்தது. இதைப்பற்றி கூறுகையில் கோலி தான் சிறு வயதில் இருந்து கேட்டு வளர்ந்த இசை ஜாம்பவானின் இசையில் பாடுவதற்கு முதலில் மிகவும் பயந்ததாகவும்  எளிமையான வரிகளை தந்து தன்னை அவர் காப்பாற்றி விட்டதாகவும் கூறினார். ரஹ்மான் அவர்கள் கூறுகையில் தான் கோலிக்காக எளிமையாகவே இசையமைத்ததாகவும், மேலும் விளையாட்டு போட்டிகளுக்கு இசை அமைக்க ஆர்வமாய் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Comments