உள்ளூர் லீக்முறை போட்டிகள் இந்தியாவின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவவில்லை. சம்மதமா? ஏன்?


ranji trophy: Latest News, Videos and ranji trophy Photos | Times ...

நான் இந்த குறிப்பிட்ட கருத்திற்கு உடன்படவில்லை. ஏனெனில், என் பார்வையின்படி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டபின் அதே போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கும் புதுப்புது லீக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் திறமையான வீரர்கள் பலர் உருவாகி, நாட்டின் சிறந்த அணியைத் தேர்ந்தெடுப்பதில் கடும் போட்டி நிலவுவதுடன் தேர்வாளர்களின் வேலையும் கடினமாக மாறி உள்ளது. இவ்வளவு காலமாக கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் புது முகங்களை கண்டறிவதற்கு ரஞ்சி போட்டிகள் மட்டுமே உதவி வந்தன. ஐ.பி..எல் வந்த பிறகே அப்போட்டிகளின் வாயிலாக ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற பல இளம் வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதே போல், ஐ.எஸ்.எல் போட்டிகளானது  லென் டோங்கல், ஜெர்ரி லாரென்சுவாலா, உடாந்தா சிங், லால்ருத்தாரா போன்ற பல இளம் சிங்கங்களை நமது கால்பந்து அணிக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாய் பரிசளித்துள்ளது.

ஐ.பி.எல், ஐ.எஸ்.எல்லுடன் மற்ற பிற லீக் போட்டிகளான ஐ.பி.டி.எல், ப்ரோ-கபடி லீக், ஹாக்கி இந்தியா லீக் மற்றும் பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டிகளும் சமீப காலமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்த போட்டிகளின் வாயிலாக நமது நாட்டின் உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற வீரர்களுடன் போட்டியிடும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவர்களின் விளையாட்டுத் திறமையையும், நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் சாதனையாளர்களுடன் பழகுவதன் மூலம் நம் நாட்டு வீரர்களும் உலக அரங்கில் வெல்வதற்கான மனப்பாங்கை ஏற்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

மேலும் இது போன்ற உள்நாட்டு லீக் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம், வளர்ந்து வரும் நம்நாட்டு வீரர்களுக்கு உலக தர பயிற்சியாளர்களுடன் பழகும் அரிய வாய்ப்பு கிடைப்பதுடன், அவர்களிடம் இருந்து விளையாட்டு நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது. கடந்தாண்டு ஐ.எஸ்.எல் போட்டிகளில் கூட ஜான் கிரகோரி, செர்ஜியோ லொபேரா, ஜார்ஜ் கோஸ்டா போன்ற பல கால்பந்து ஜாம்பவான்கள் நம் இளம் வீரர்களை பயிற்றுவிப்பதை நம்மால் காண முடிந்தது.

எனவே எனது கருத்துப்படி, பல ஆண்டுகளாக உலக விளையாட்டு அரங்கில் சோபிக்க தவறிய நம் நாடு, இத்தகைய உள்நாட்டு லீக் போட்டிகள் உருவாக்கப்பட்டப் பின்னரே மெல்ல சாதிக்க தொடங்கியுள்ளது. சுனில் சேத்ரியின் கோல் சாதனைகளும், பி.வி சிந்து உலக சாம்பியன் ஆனதும், இன்றளவும் அசைக்க முடியா நம்பர் 1 இறுதிஓவர் பவுலராக பும்ரா ஜொலிப்பதும் இத்தகைய போட்டிகளில் பங்கேற்று பயிற்சி பெற்றதால் தான். எனவே, நிச்சயமாக இத்தகைய உள்நாட்டு போட்டிகள் நம் நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


Facebook post:

இன்று நாம் மிகவும் சுவாரசியமான ஒரு தலைப்பில் விவாதிக்கப் போகிறோம். உள்ளூர் போட்டிகள் இந்தியாவின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவுகிறதா இல்லையா என்பதை எங்களிடம் தெரிவியுங்கள். அதனோடு, அதற்கான காரணத்தையும் சொல்லுங்கள். உங்கள் கருத்துகளை பார்வையிட நாங்கள் மிகவும் ஆவலாய் உள்ளோம்! இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள எங்கள் கட்டுரையினை இங்கு கிளிக் செய்து படியுங்கள்.

#பி.பி.எல் #எச்.ஐ.எல் #ஐ.பி.எல் #இந்தியவிளையாட்டு #விளையாட்டுவளர்ச்சி #உள்நாட்டுலீக்போட்டிகள்


Twitter copy:



இந்தியாவின் உள்ளூர் லீக் போட்டிகள் இந்திய விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு உதவுகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா? இங்கு கிளிக் செய்து எங்கள் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என படிக்கவும்...

Comments