பேஸ்புக் வலைதளத்தின் நிறுவனரின் விவரங்களே பாதுகாப்பாக இல்லையாம்

Image result for mark zuckerberg


நியூயார்க், ஏப்ரல்-15, 2018: பேஸ்புக் சமூக வலைதளத்தின் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது சமீப காலமாக நிறைய வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் பதியப்பட்டு வருகின்றன. இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அவ்விசாரணையில் சுமார்  20 நிமிடங்கள் "ஆம் அல்லது இல்லை" என பதிலளிக்கும் படியான சரமாரியான கேள்விக்கணைகள் மார்க்கிடம் தொடுக்கப்பட்டன.

முக்கியமாக பேஸ்புக்கில் எந்த மாதிரியான தகவல் பரிமாற்ற முறைகேடுகள் நடந்தன என்பது குறித்து அதிகம் விசாரிக்கப்பட்டது. மார்க் அதிகம் சொதப்பியதும் இந்த பகுதியில்தான். இறுதியில் மார்க்கிடம் ஒரு வழக்கறிஞர் 'உங்களுடைய தகவல்களும் திருடப்பட்டனவா?'' என்று வினா எழுப்பினார். அதற்கு  மார்க் அதிர்ச்சிகரமாக 'ஆம்' என்று பதிலளித்தார். ஆனால் அவருடைய தகவல்கள் எப்படி திருடப்பட்டது என்று இதுவரை விளக்கம் கொடுக்கப்படவில்லை.


இருப்பினும் அவர் பொய் சொல்கிறார் என்று மார்க்கிற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். எது எப்படியோ, பேஸ்புக் உரிமையாளரின் தகவல்களே பாதுகாப்பாய் இல்லை என்கிறபோது நம்முடைய தகவல்கள் எம்மாத்திரம்? எனவே, இனியாவது அவசியமான தகவல்களை மட்டும் சமூக வலைதளங்களில் பகிர கற்றுக் கொள்வோம்!

Comments