ஏன் ஆமைகள் ஓடுகளை பெற்றுள்ளன? - உண்மையான காரணம்:





ஆமைகள் தம்முடைய எதிரிகளிடம் இருந்து தப்ப ஓடுகளை பெற்றுள்ளதாய் நம்பப்பட்டு வந்தது. ஆனால் புதிய ஆய்வில் அவை ஆமைகள் வெப்பத்தில் இருந்து தப்ப தோண்டுவதற்காக அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. யுனடோசாரஸ் என்னும் ஆமை இனத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் பழங்காலத்தில் அவை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக சீதோஷ்ண நிலையில் வாழ்ந்து வந்தபோது, தோண்டுவதற்கு எதுவாக மார்பெலும்புகள் விரியுமாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது அறியப்பட்டுள்ளது. இவையே பின்னாளில் ஓடுகளாய் மாறியுள்ளதாக புதைபடிம ஆய்வாளர் டைலர் லைசன் கண்டுபிடித்து உள்ளார்.

Comments