முதல் முறையாக சாம்பியன் மகுடம் சூடியது போர்சுகல்:




பிரான்சில் நடைபெற்று வந்த பதினைந்தாவது யூரோ கால்பந்து போட்டியில் அதிர்ச்சிக்கு பஞ்சமில்லை. உலக சாம்பியன் ஜெர்மனி, பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிகளின் வெளியேற்றத்துக்கு பின் இறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் அணியான பிரான்சும் போர்சுகல் அணியிடம் மண்ணை கவ்வியது.  முதல் பாதியில் போர்சுகல் இன் ஃப்யூஸ் புடுங்கப்பட்டது. ஆம், பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட அணியின் கேப்டன் கிரிஸ்தியனோ ரொனல்டோ அடிபட்டதால் வெளியேறினார். இதை பிரான்ஸ் அணியால் பயன்படுத்திக் கொள்ள முடியாததால் ஆட்டம் கோல் இன்றி சம நிலையில் முடிந்தது.  எக்ஸ்ட்ரா டைம்இல் போர்ச்சுகல் அணிக்காக ஆபத்பாந்தவராக களம் இறங்கிய ஈடர் 109 வது நிமிடத்தில் கோல்டன் கோல் அடித்து பிரான்ஸ் ரசிகர்களின் கோப்பை கனவை சுக்கு நூறாக்கினார். இதன் மூலம் முதல் முறையாக போர்சுகல் யூரோ சாம்பியன் ஆகி அசத்தியது.

Comments